04 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 09. மானுடம் நோக்கி...

“ஆயுதம்!”
விலங்கின் பரிணாமம்
மனிதன்!
கல்லின் பரிணாமம்
ஆயுதம்!
மிருக வேட்டைக்கு
கல்லைக் கண்டெடுத்த மனிதன்
மனித வேட்டைக்கு
ஆயுதத்தை கண்டு பிடித்தான்!
மிருகத்தை மனிதனாக்கியது
உயிரியல் பரிணாமம்!
மனிதனை மிருகமாக்குவது
ஆயுத பரிணாமம்!
அரசன் கையில்
அன்று செங்கோல் இருந்தது!
ஆழ்வோர் கையில்
இன்று சுடுகோல் இருக்கிறது!
செங்கோல் உயர உயர
மக்கள் வாழ்ந்தனர்!
சுடுகோல் பெருக பெருக
மக்கள் அழிந்தனர்!
இதுவரை…
ஆயுதத்தை மனிதன் தயாரித்தான்!
இனிமேல்…
மனிதனை ஆயுதம் தீர்மானிக்கும்
13/01/2000
Like this:
Like Loading...
Related
Previous 17 – சாதனை! Next 19 – மதங்களைக் காப்போம்!