அறிமுகம்

 “கண்ணாடி முகத்தைக் கட்டும்!

காலக் கண்ணாடி உன் நிழலையும் காட்டும்!”

 

என் இதயத்தின் வலிகளை

இங்கே வரிசைப் படுத்தி இருக்கிறேன்!

 

என் வாழ்வின் வசந்தங்களை

இங்கே ஊஞ்சல் கட்டி ஆடவிட்டிருக்கிறேன்!

 

என் வேதனைகளை

இங்கே விம்மி வெடிக்க வைத்திருக்கிறேன்!

 

என் சோகங்களை

இங்கே சொல்லாமல் சொல்லியிருக்கிறேன்!

 

என் இதயம் சுமக்கும் சிலுவைகளை

இங்கே இறக்கி வைத்திருக்கிறேன்!

 

என் கண்ணீர்த் துளிகளை

இங்கே பன்னீராகத் தெளித்திருக்கிறேன்!

 

என் காதலை

இங்கே புன்னகைப் பூக்கள் கொண்டு தூவியிருக்கிறேன்!

 

என் வார்த்தை அலங்காரங்களால்

உங்களை நான் வசப் படுத்தியிருக்கிறேன்

என்பது உண்மை தான்!

 

நான் நிறையப் பொய் சொல்லியிருக்கிறேன்!

கொஞ்சம் தான் மெய் பேசியிருக்கிறேன்!

 

நான் சொன்ன பொய்களை மெய் என்றும்

நான் சொன்ன மெய்களை பொய் என்றும்

நீங்கள் புரிந்து விடக்கூடாது என்பதில்

நான் கண் மூடாமல் தவம் செய்திருக்கிறேன்!

 

என் தவத்தைக் கலைப்பதற்கு நீங்கள்

மேனகைகளையோ… ரதிகளையோ…

அனுப்பி வைக்கத் தேவையில்லை!

ஒரு சிறு மின்னஞ்சல் போதும்!

 

எனக்குப் பூமாலை சாற்றுங்கள்!

பொன்னாடை போர்த்துங்கள்!

என்று நான் கேட்கவில்லை!

புன்னகைப் பூ ஒன்றை

பரிசளியுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்!

 

என் கவிதைகள் என்னோடு வாழ்ந்து விட்டன!

என் கவிதைகளோடு நானும் வாழ்ந்து விட்டேன்!

என் கவிதைகளில் ஒன்று

உங்களில் ஒருவருக்கு ஒளி ஊட்டினால் போதும்

என் தவப் பயனை நான் அடைவேன்!

 

சொற்குற்றம்  பொருட்குற்றம்

ஆங்காங்கே விரவிக் கிடக்கலாம்!

தமிழ் கற்றறிந்த நல்லுகம்

பொறுத்தருள வேண்டுகிறேன்!

 

பஞ்சமிர்தத்தை தேனில் ஊறவைத்து

உங்களுக்கு பருகத் தந்திருக்கிறேன்!

 

என்றும் உங்களுடன்… 

 

4 Comments (+add yours?)

  1. ஸ்ரீஸ்கந்தராஜா
    Jul 14, 2011 @ 22:42:08

    சொற்குற்றம் பொருட்குற்றம்
    ஆங்காங்கே விரவிக் கிடக்கலாம்!
    தமிழ் கற்றறிந்த நல்லுகம்
    பொறுத்தருள வேண்டுகிறேன்!

    Reply

  2. பொன்-சிவகௌரி
    Jul 21, 2011 @ 06:40:22

    மிக எளிமையான முறையில் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்!

    எனக்குப் பூமாலை சாற்றுங்கள்!
    பொன்னாடை போர்த்துங்கள்!
    என்று நான் கேட்கவில்லை!
    புன்னகைப் பூ ஒன்றை
    பரிசளியுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்!

    புன்னகை பூக்களை அள்ளிச் சொரிகொன்றோம். ஏற்றுக் கொள்ளுங்கள்!

    Reply

  3. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
    Jul 30, 2011 @ 16:03:47

    //என் கவிதைகள் என்னோடு வாழ்ந்து விட்டன!
    என் கவிதைகளோடு நானும் வாழ்ந்து விட்டேன்!
    என் கவிதைகளில் ஒன்று
    உங்களில் ஒருவருக்கு ஒளி ஊட்டினால் போதும்
    என் தவப் பயனை நான் அடைவேன்!//
    தங்களின் அனுபவம் கலந்த அறிமுகம் ! அறியட்டும் தமிழ் நல்லுலகம் !! வாழ்க உன்பணி !!!

    Reply

  4. ஸ்ரீஸ்கந்தராஜா
    Jul 30, 2011 @ 20:54:30

    மிகவும் நன்றி திரு.தமிழ்க்கிறுக்கன் நடாசிவா அவர்களே!!!

    தங்களின் அன்பும் ஆதரவும் இருக்கும்வரை
    என் பேனா எழுதிக் கொண்டேயிருக்கும்!!!

    நன்றி!!! வாழ்த்துக்கள்!!!!

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: