01 – ஒளி வீசட்டும்!

 

 

 

 

 

 

 

 

ஒளி வீசட்டும்!

 

தீபங்கள் சுடரேந்தி

ஒளி வீசட்டும்!

தெய்வத்தின் சந்நிதிகள்

தாழ்  திறக்கட்டும்!

தேன்நிலவு வந்திங்கே

பால் பொழியட்டும்!

தென்றலது தெம்மாங்கில்

இசை பாடட்டும்!

செந்தமிழில் தேன்கலந்து

கவிஎழுதட்டும்!

செவ்விதழ்கள் தேனூறும்

மலராகட்டும்!

முற்றத்து மல்லிகை

மணம்வீசட்டும்!

முகநூலின் உறவெல்லாம்

அகம் மலரட்டும்!!

02 – திபாவளி வாழ்த்து!

தீபாவளி வாழத்து!

 

முகம் காட்டியும்

முகம் காட்டாமலும்

முகநூல் வாயிலாக

மெகா உலா வரும்

அன்பு நெஞ்சங்களுக்கு

அடியேனின் தீபாவளி

நல் வாழ்த்துக்கள்!

இவ்வின்பத் திருநாள் போல்

என்றென்றும் இனிதாக

எல்லா நலனும் பெற்று!

எல்லா வளமும் பெற்று!

இனிதாக வாழ்கவென

வாழ்த்துகிறேன்!