02 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 14. சித்திரைத் திருநாளே!

“சித்திரைத் திருநாளே!”
சித்திரைத் திருநாளே!
சித்திரைத் திருநாளே!
இத்தரை மீது வரும்
சித்திரைத் திருநாளே!
எத்தனை உயிரிழந்தோம்?
எத்தனை உறவிழந்தோம்?
எத்தனை சுகமிழந்தோம்?
எத்தனை பலமிழந்தோம்?
தமிழனின் முகமிழந்தோம்!
தரணியில் அகமிழந்தோம்!
தலைமுறை தனைஇழந்தோம்!
தார்மீகம் எலாமிழந்தோம்!
சித்திரைத் திருநாளே!
சித்திரைத் திருநாளே!
இத்தரை மீது வரும்
சித்திரைத் திருநாளே!
முத்தமிழ் நாமிழந்தோம்!
மூவேந்தர் கொடியிழந்தோம்!
முப்பெரும் ஊர்இழந்தோம்!
மூத்த தமிழ் குடிஇழந்தோம்!
அற்புதம் பலவிழந்தோம்!
ஆயிரம் வாழ்விழந்தோம்!
அவனியில் வாழ்வதற்கே
அருகதை நாமிழந்தோம்!
சித்திரைத் திருநாளே!
சித்திரைத் திருநாளே!
இத்தரை மீது வரும்
சித்திரைத் திருநாளே!