06 – திருமணநாள் வாழ்த்துக்கள்!

திருமணநாள் வாழ்த்துக்கள்!

இல்லறம் இனிது கண்டு

இன்றுபோல் என்றும் வாழ்க!

நல்லறம் நீங்கள் கண்டு

நலமுடன் நாளும் வாழ்க!

புண்ணியம் கோடிசெய்தோம்!

பிள்ளைகளாக வந்தீர்!

பூமியில் நீங்கள் வாழ

போற்றுவோம் இறைவன் பாதம்!

மனம்போல் வாழ்வு கண்டீர்!

மங்களநாள் நிறைவு கொண்டீர்!

மலர்தூவி வாழ்த்துகிறோம்!

மணமக்கள் நீவிர் வாழ்க!

பலநூறு ஆண்டு காலம்

பண்போடு நீங்கள் வாழ்க!

பதினாறு வளங்கள் கண்டு!

பல்லாண்டு காலம் வாழ்க!

எண்ணிய எண்ணம் யாவும்

இன்றுபோல் நிறைவேறட்டும்!

இறைவன் திருவருளால்

இல்வாழ்க்கை இனிதாகட்டும்!

சுற்றம் வாழ்த்துரைக்க!

சொந்தங்கள் பூச்சொரிய!

இல்லறம் இனிதாகட்டும்!

இல்வாழ்க்கை வளமாகட்டும்!

சொந்தமும் உறவுகளும்!

25-02-2004 

05 – திருமண வாழ்த்து! (முதலாம் வருடம்)

“திருமண வாழ்த்து!”

(முதலாம் வருடம்)

“திருமண வாழ்த்து!”
விஷ்ணு – தர்ஷினி
(முதலாம் வருடம் – 26-05-2011)

எல்லாம் வல்ல
இறைவன் திருவருளால்
எல்லா நலனும் பெற்று!
எல்லா வளமும் கண்டு!
இன்றுபோல் என்றென்றும்
இனிதாக வாழ்கவென
வாழ்த்துகிறோம்!

வாழ்க நீவிர் பல்லாண்டு!
வளமோடு வாழ்க! வாழ்க!!
பண்போடு அன்பு கொண்டு!
பார்புகழ நீவிர் வாழ்க!!

04 – வாழ்க்கைப்பள்ளி

“வாழ்க்கைப்பள்ளி!”

வாழ்கைப்பள்ளிக்கு வந்த
வயதுக் குழந்தைகளே
வாருங்கள்!

பள்ளியில் பயில
உங்களுக்கோர்
ஆசான் வேண்டும்!
ஆனால்…
வாழ்க்கைப் பள்ளியிலோ
நீங்களே ஆசான்கள்!!

கற்பாறை கூட
மெல்லிய வேர் வரும்போது
விட்டுக்கொடுக்கிறதே!
வாழ்க்கையின் அகரமும் அதுதான்!

பூவுக்கும் மட்டும் அல்ல…
உங்கள் பேச்சுக்கும் வாசம் உண்டு!
உரோமம் இழப்பினும்
உயிர்வாழ விரும்பாத கவரிமான்
உங்கள் ஜாதிதான்!

ஏழு தடவைகள் தவறியும்
எட்டாவதாக ஏறிய சிலந்தி
உங்களுக்கு இன்னொரு கீதை!

வாழ்க்கைக்குள் வந்தவர்கள் பலர்!
ஆனால்…
வாழ்ந்தவர்கள் சிலர்!

நீங்கள் வாழப்பிறந்தவர்கள்!
வாழுங்கள் நீடூழி!!

சுற்றம் போற்றுங்கள்!
சொந்தம் பேணுங்கள்!
கற்றோரைத் துதியுங்கள்!
மற்றோரை மதியுங்கள்!!

ஆயிரம் யுகங்கள் ஆனால் என்ன?
வாழ்க்கை என்றென்றும்
உங்களுக்குத்தான்!

வாழ்க வளமுடன்!!
வாழுங்கள் நீடூழி!!

03 – திருமண நல்வாழ்த்துக்கள்!

“திருமண நல் வாழ்த்துக்கள்!”

பூக்கள் தூவுகிறோம்!
பூமாலை சூட்டுகிறோம்!
வாழ்த்துக்கள் பாடுகிறோம்!
வாழ்கநீர் பல்லாண்டு!

வானம் வாழ்த்துரைக்க!
வையகத்தோர் பூச்சொரிய!
வாழ்க்கை அமையட்டும்!
வசந்தங்கள் வீசட்டும்!

சுற்றம் சூழ்ந்திருக்க!
சொந்தங்கள் மகிழ்ந்திருக்க!
பெற்றோர்கள் நாம்இன்று
பெருமகிழ்ச்சி கொள்ளுகிறோம்!

ஆல்போல் விழுதிறக்கி!
அறுகுபோல் வேரூன்றி!
வாழ்க நீர் பல்லாண்டு!
வாழ்த்துகிறோம் நாம்இன்று!

குறைகுற்றம் ஏதுமின்றி!
நிறைவாழ்வு நீவிர்காண்க!
நெஞ்சத்தில் மலர்கள்தூவி!
நேசமுடன் வாழ்த்துகிறோம்!

அக்னி சாட்சிநிற்க!
அந்தணர்கள் வேதம்ஓத!
ஆயிரம் ஆண்டுகாலம்!
அவனியில் நீவிர்வாழ்க!

பழுதறு பண்பு கொண்டு!
பதினாறு வளங்கள் கண்டு!
பல்லாண்டு காலம் நீங்கள்
பாரினில் நிலைத்து வாழ்க!

வள்ளுவன் வகுத்த வேதம்!
வாழ்வினில் போற்றி வாழ்க!
இல்லறம் இனிது கண்டு!
நல்லறம் செழித்து வாழ்க!

02 – திருநிறைச்செல்வி!

“திரு நிறைச் செல்வி!”

01 – ஆயிரம் ஆண்டு காலம்!

“ஆயிரம் ஆண்டு காலம்!”

இல்லற வாழ்வு தன்னில்
இணைகின்றீர் நீங்கள் இன்று!
எல்லா வளமும் பெற்று
இன்புற நீவிர் வாழ்க!

கொட்டு மேளம கொட்ட
கோடி மலர் குவிந்து விழ
ஆசிகள் பலவும் பெற்று
அன்போடு  நீவிர் வாழ்க!

அறம் பொருள் இன்பம் கண்டு
அளவிலா இன்பம் பொங்க
ஆயிரம் ஆண்டு காலம்
அவனியில் நீவிர் வாழ்க!

பதினாறு வளங்கள் கண்டு
பல்லாண்டு காலம் வாழ்க!
பண்புகள் யாவும் பெற்று
பாரினில் நிலைத்து வாழ்க!!

அன்புடன்

அம்மா அப்பா உறவுகள்!