01 – நெஞ்சுக்குள் நீயிருக்க…!

நெஞ்சுக்குள் நீயிருக்க….!

 

இதயங்கள் இரண்டிங்கே இடம்மாறுது!

இதையறியாமல் மனமிங்கே தடுமாறுது!

இரவென்றும் பகலென்றும் மனமேங்குது!

இதமான சுகம்காண உளம்நாடுது!

உறவென்றும் பிரிவென்றும் யார்சொன்னது?

உலகங்கள் நமையன்றி வேறானதோ?

சொந்தங்கள் பந்தங்கள் வேறேதுமில்லை!

சொர்க்கங்கள் உனையன்றி எனக்கேதுமில்லை!

கண்ணுக்குள் உனைவைத்து இமைமூடுவேன்!

மண்ணுக்குள் மறைந்தாலும் உனைநாடுவேன்!

நெஞ்சுக்குள் நீயிருக்க தினம் ஏங்குவேன்!

நினைவெல்லாம் நீயாக முகம்காணுவேன்!

துணையென்று நீவந்தால் நலம்காணலாம்!

சொர்க்கத்தின் எல்லைவரை நாம்போகலாம்!

இணைகின்ற உறவுக்குள் நாம்வாழலாம்!

எந்நாளும் குறையாத சுகம்காணலாம்!