22 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 19. கீதாஞ்சலி!

“அன்னையும் பிதாவும் நீரே!”
அன்னையும் பிதாவும் நீரே!
அவனியில் தெய்வம் நீரே!
புண்ணியம் கோடி செய்தேன்!
பூமியில் அடைந்தேன் உம்மை!
ஆயிரம் தவங்கள் நோற்பேன்!
ஆயிரம் தலங்கள் செல்வேன்!
ஆயிரம் பிறவி தோறும்
அன்னையும் பிதாவும் நீரே!
ஐயா என்றழைத்தே உங்கள்
அன்பினைப் பெற்றவன் நானே!
அம்மா என்றழைத்த தெல்லாம்
அன்னையே உன்னைத்தானே!
அன்போடு பாசம் தந்து!
ஆயகலை யாவும் தந்து!
பண்போடு வாழ வைத்தீர்!
பணிந்திருப்பேன் உங்கள் பாதம்!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
17/07/2011
Like this:
Like Loading...
Related
Previous 05 – பாதங்கள் தொழுகின்றேன்! Next 01 – கிரிகாசன் கவிதைகள்!
Jul 22, 2011 @ 09:57:13
“ஆயிரம் தவங்கள் நோற்பேன்!
ஆயிரம் தலங்கள் செல்வேன்!
ஆயிரம் பிறவி தோறும்
அன்னையும் பிதாவும் நீரே!”
Jul 22, 2011 @ 16:09:46
ஐயா என்றழைத்தே உங்கள்
அன்பினைப் பெற்றவன் நானே!
அம்மா என்றழைத்த தெல்லாம்
அன்னையே உன்னைத்தானே!
மிக அருமை!
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
அனைத்திற்கும் முதலாய் நாம் கண்ட தெய்வங்கள்!
எங்கள் கண் முன்னே அசைகின்ற நடமாடும் திருக் கோயில்கள்!
எம் உயிராய், மெய்யாய், உயிர் மெய்யாய் இருப்பவர்கள். அம்மா,அப்பா!
வாழ்த்துக்கள்!
Jul 22, 2011 @ 16:19:51
“அன்னையும் பிதாவும் நீரே!
அவனியில் தெய்வம் நீரே!
புண்ணியம் கோடி செய்தேன்!
பூமியில் அடைந்தேன் உம்மை!”
நேசம் மாறாது நெஞ்சத்தில் இருத்தி!
பாசம் மாறாது பக்குவமாய் வளர்த்தெடுத்த
பெற்றோரின் புகழ் பாடும் இந்த கவிதைக்கு
அழகான கருத்துக்கள் கூறிய சகோதரி
பொன்.சிவகௌரிக்கு மிகவும் நன்றி!
வாழ்த்துக்கள்!!
Jul 22, 2011 @ 18:14:57
” புண்ணியம் கோடி செய்தேன்!
பூமியில் அடைந்தேன் உம்மை!”
அந்தப் புண்ணியத்தால் இன்று
இந்த மண்ணில் சிறப்புற
சொந்தம் கொண்டு வாழ்கிறோம்.
அதை சிறப்பைப் பேணிப் பாதுகாப்போம்.
அன்னை தந்தைக்கு உயர்வான அஞ்சலிகள்.
Jul 22, 2011 @ 18:45:17
தங்களின் உயர்வான அஞ்சலிக்கு
மிகவும் நன்றி!