22 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 19. கீதாஞ்சலி!

“பாதங்கள் தொழுகின்றேன்!”
பாதங்கள் தொழுகின்றேன்!
பாடியுமை மகிழ்கின்றேன்!
பக்தியுடன் உமைநினைந்தே
பாரினிலே வாழ்கின்றேன்!
தாயேஉன் முகமறியேன்!
தவறென்ன நான்செய்தேன்?
பாவியெனைப் புறந்தந்தே
பாதிவழி போயினையோ?
முந்தித் தவமிருந்தாய்!
முன்னூறு நாள் சுமந்தாய்!
வந்து பிறந்த என்னை!
வளர்த்தெடுக்க நீயில்லை!
கொடிய நோய் வந்து
கொடிமரமே சாய்ந்தாயோ!
பிரிய மனமின்றி
பிரிந்து நீயும் சென்றாயோ!
காலன் வகுத்த விதி
கனிமரமே கண்மறைந்தாய்!
சேய்நான் அருகிருந்தும்
செய்யவில்லை ஒருதொண்டும்!
உள்ளம் குளிரவைத்து
உச்சி மோந்தாயே!
உயிருள்ள வரை நாளும்
உம்பாதம் நான் துதிப்பேன்!
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
17/07/2011
Like this:
Like Loading...
Related
Previous 22 – வாழ்க்கை என்பது…! Next 06 – அன்னையும் பிதாவும் நீரே!
Jul 22, 2011 @ 09:50:14
“காலன் வகுத்த விதி
கனிமரமே கண்மறைந்தாய்!
சேய்நான் அருகிருந்தும்
செய்யவில்லை ஒருதொண்டும்!”
Jul 23, 2011 @ 22:57:06
உயிருள்ள வரை நாளும்
உம்பாதம் நான் துதிப்பேன்!
பக்தியுடன் உமைநினைந்தே
பாரினிலே வாழ்கின்றேன்!
Jul 24, 2011 @ 07:05:51
மிகவும் நன்றி ஐயா
திரு.தமிழ்க்கிறுக்கன் நடாசிவா அவர்களே!
வாழ்த்துக்கள்!!