04 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 09. மானுடம் நோக்கி...

“வாழ்க்கை என்பது…!”
வாழ்க்கை என்பது
இனிமையானது!
வருவது எதனையும்
ஏற்றுக்கொள்!
வாழ்க்கை என்பது
இன்பம் தருவது!
இருப்பது எதனையும்
பகிர்ந்து கொடு!
வாழ்க்கை என்பது
அனுபவமானது!
வீழ்ந்தபோதும்
எழுந்து நில்!
வாழ்க்கை என்பது
முத்தி தருவது!
இல்லறம் என்னும்
நல்லறம் பேண்!
வாழ்க்கை என்பது
விசித்திரமானது!
காட்டிய வழியில்
பயணம் செய்!
Like this:
Like Loading...
Related
Previous 21 – உன் இதயம் சுமக்கட்டும்! Next 05 – பாதங்கள் தொழுகின்றேன்!