04 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 09. மானுடம் நோக்கி...

“உன் இதயம் சுமக்கட்டும்!”
உயிருள்ள
வார்த்தைகளை
உன் உதடுகள்
உதிர்க்கட்டும்!
உயர் கலை
சிற்பங்களை
உன் விரல்கள்
செதுக்கட்டும்!
உன்னத
சிந்தனையை
உன் இதயம்
சுமக்கட்டும்!
உலகம்
உள்ளவரை
உன் பெருமை
பேசட்டும்!
காலம்
உள்ளவரை
உன் கண்கள்
தேடட்டும்!
பூமி
உள்ளவரை
புன்னகை
பூக்கட்டும்!
Like this:
Like Loading...
Related
Previous 20 – புன்னகைப் பூக்கள் மலரட்டும்! Next 22 – வாழ்க்கை என்பது…!