04 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 09. மானுடம் நோக்கி...

“அன்பு!”
இதயத்தின்
மெல்லிய சுவர்களில்
இது ஊற்றெடுக்கிறது!
உயிரின் துல்லியமான
அதிர்வுகளால்
இது பயிராகிறது!
பாசம் விளையும்
மனித நிலங்களில்
இது பூத்து குலுங்குகிறது!
பண்பெனும்
நீர்ப்பாசனம் பெற்று
இது முற்றிக்கதிராகிறது!
முகங்கள் காணாமல்
அன்பு முளைப்பதில்லை!
யார் சொன்ன பொய் இது??
இதோ…
வார்த்தைகள் சுமந்து வரும்
மலர்களில் தானே
வாசனை அதிகம் இருக்கிறதே!!
05/12/1999
Like this:
Like Loading...
Related
Previous 12 – முத்தான உறவுகளே! Next 14 – நாளைய மனிதன்!